விளையாட்டு செய்திகள்

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் -பெடரர் தோல்வி

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடாலிடம் (ஸ்பெயின்) 3-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் தோல்வியடைந்துள்ளார்.

முதல் செட்டை எளிதில் பறிகொடுத்த பெடரர் 2-வது செட்டில் தொடக்கத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். அதன் பிறகு நடாலின் அதிரடியான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்விகண்டார்.

2 மணி 25 நிமிடங்கள் நீடித்த நேற்றைய ஆட்டத்தின் முடிவில் ரபெல் நடால் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 12-வது முறையாக பிரான்ஸ் பகிரங்க தொடரின் இறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.

களிமண்தரை போட்டிகளில் பெடரருக்கு எதிராக 16 ஆட்டங்களில் மோதியுள்ள நடால் அவற்றில் 14-ல் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க