விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள்

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டி தொடரில் 10-வது நாளான இன்று, 2 ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன.

கார்டிப்பில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில்; இங்கிலாந்து, அணி பங்களாதேஸ் அணியை எதிர்கொள்கிறது.

அணிகளின் விபரம்-
இங்கிலாந்து: ஜோசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், மோர்கன் (தலைவர்;), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க்வுட்.

பங்களாதேஸ்- தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன், மக்முதுல்லா, மொசாடெக் ஹ_சைன், முகமது சைபுதீன், மெஹிதி ஹசன், மோர்தசா (தலைவர்;), முஸ்தாபிஜூர் ரகுமான்.

இரண்டாவது ஆட்டம்

டவுன்டானில் இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பஙகளாதேஸையும்; தோற்கடித்து வலுவான நிலையில் உள்ளது.

எனவே இன்றும் அந்த அணியின் திறமையை பார்க்கமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க