புதியவைவெளிநாட்டு செய்திகள்

மெக்ஸிகோ மீதான வரிவிதிப்பு நிறுத்தப்படுகிறது-ஜனாதிபதி ட்ரம்ப்

மெக்ஸிகோவுடனான குடியேற்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள நிலையில் மெக்ஸிகோ மீது விதிக்கப்படவிருந்த வரி காலவரையறை இன்றி நிறுத்திவைக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க அல்லது குறைக்க மெக்ஸிகோவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் திங்கற்கிழமை மெக்ஸிகோ மீது விதிக்கப்படவிருந்த வரி விதிப்பு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க