வடக்கு செய்திகள்

வடக்கில் தொடர்ந்தும் இராணுவ அடக்குமுறை-ஜனாதிபதிக்கு கடிதம்

வட பகுதி மக்கள் தொடர்ந்தும் இராணுவ அடக்கு முறைக்குள் உட்பட்டு வரும் நிலையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதம் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ,கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பல்வேறு விதமான சோதனைச் சாவடிக்குள் துன்ப துயரத்தை அனுபவித்த தமிழ் மக்களுக்கு மீண்டும் ஏன் இந்த வேதனையான சோதனை?

கடந்த ஈஸ்டர் தாக்குதலில் வடக்கில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழவில்லை என்பது தாங்கள் அறிந்ததே.  அப்படியானால் ஏன் இங்கே அடுக்கடுக்கான சோதனைச் சாவடிகள்.

வட பகுதி மக்களை தொடர்ந்தும் இராணுவ அடக்கு முறைக்குள் உட்படுத்துவது தான் நோக்கமா?  என பல கேள்விகளும் துன்பங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இராணுவ நெருக்கடியிலிருந்து மக்களை விடுவியுங்கள். சனநாயக சிவில் இடைவெளியை மழுங்கடித்து விட்டீர்கள். ஆகவே எமது வேண்டுகையை சாதகமாக பரிசீலிக்குமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என கடிதத்தில் மேலும் கேட்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க