வடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் போதைக்கு எதிரான சுற்றிவளைப்பு-10 பேர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டதத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்ற போதை ஒழிப்பு சுற்றிவளைப்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘போதையற்ற நாடு’ என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக நேற்று முன் தினம் விசுவமடு மாணிக்கபுரம் கிராமம் சுற்றிவளைக்கப்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது நான்கு வீகளில் சட்டவிரோத கசிப்பு இனம் காணப்பட்டுள்ளதுடன் அதனை பாவனைக்க உட்படுத்திய மற்றும் வீடுகளில் வைத்திருந்த 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 19.6 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

கிராம அலுவலகர், ஜனாதிபதி செயலக போதை ஒழிப்பு பிரிவினர்,பொலிஸார் ,மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து இச்சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.

சுற்றிவளைப்பிற்கு முதல்நாள், மாணிக்கபுரம் பகுதியில் சிவில் பாதுகாப்பு குழுவினால் போதை ஒழிப்பிற்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க