ஜனாதிபதியின் ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நான்காம் நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் நகர்புறத்தை அழகுப்படுத்தல் மற்றும் சூழலை பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் முல்லைத்தீவு நகர்பகுதியில் முதன்மை வீதிகளின் இரு மருங்குகளிலும் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நகர்பகுதியில் இருந்து மாங்குளம் வீதியிலும், முல்லைத்தீவு பரந்தன் வீதியின் இருமருங்கிலும் 152 மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டுள்ள.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஜனாதிபதி செயலக அதிகாரிகள்,முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள்,காணிப்பயன்பாட்டு அதிகாரிகள்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் முல்லைத்தீவு மகாவித்தியாலய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் 59 ஆவது படைப்பிரிவினை சேர்ந்த படையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்து தெரிவிக்க