பாதுகாப்புசபை கூட்டங்களுக்கு பிரதமர், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் மற்றும் காவல்துறை அதிபர் ஆகியோருக்கு அழைப்புவிட வேண்டாம் என்று ஜனாதிபதி தமக்கு அறிவுறுத்துவதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமஸ்ரீ பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னால் நேற்று சாட்சியமளித்தபோது அவர் இதனைக்குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தாம் செயலாளராக இருந்த காலப்பகுதிக்குள் 2018ஆம் ஆண்டு ஒக்டோபரில் இருந்து 2019 ஏப்ரல் வரையில் நான்கு தடவைகள் மாத்திரமே பாதுகாப்பு சபை கூட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த ஒக்டோபரில் மஹிந்த ராஜபக்ச குறுகிய காலத்துக்கு பிரதமராக இருந்தபோது அவரும் பாதுகாப்பு சபைக்கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை என்றும் ஹேமஸ்ரீ தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க