ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன
இதன்போது மாந்தை கிழக்கு பிரதேசத்தில் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் மாந்தை கிழக்கில் விவசாய திணைக்களத்தினால் 14 நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாந்தை கிழக்கு விவசாய போதனாசிரியர் கி.கீர்த்திகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ந.றஞ்சனா,பிரதிமாகாண விவசாய பணிப்பாளர் கு.உகநாதன்,மற்றும் ஜனாதிபதி செயல அதிகாரிகள்,பாடவிதான உத்தியோகத்தர்கள்,விவசாய போதனாசிரியர்கள்,கிராமசேவையாளர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,விவசாயிகள் என பலர் இந்த நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்துள்ளார்கள்
விவசாயிகளின் விவசாய செய்கையினை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித்திட்டத்தில் தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ன.
மாந்தை கிழக்கு பிரசேத்தில் உள்ள ஒட்டறுத்தகுளம் கிராமத்தில் காழான் அறுவடை விழாவும்,தேனிவளர்ப்பு கொல்லவிலாங்குளத்திலும்,ஆரோக்கிய இளைஞர் விவசாய கழகத்திற்கான மில் திறப்பு விழா நிகழ்வு ஒன்று கொல்லவிழாங்குளத்திலும், சேதன முறையிலான வீட்டுத்தோட்ட செய்கை பாலிநகரிலும்,நிலக்கடலை செய்கைதொடர்பான பயிற்சி வகுப்பு உள்ளிட்டவை மாந்தை கிழக்கில் உள்ள விவசாய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சேதன முறையிலான வீட்டுத்தோட்ட பயிற்சி வகுப்பு எல்லா கிராம விவசாயிகளுக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க