சீனாவில் 5ஜி சேவைக்கான உரிமம் வழங்கும் நிகழ்ச்சி தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மியா வெய் தலைமையில் நடைபெற்றது. இதில், சீனா தொலைத்தொடர்பு, சீனா வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றிற்கு, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 5ஜி சேவையை அறிமுகம் செய்து அதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது.
5ஜி தொழில்நுட்பம் என்பது தற்போது நடைமுறையில் இருக்கும் 4ஜி யின் பதிவிறக்க வேகத்தை விட 10 முதல் 100 மடங்கு அதிவேகமானதாகும்.
இதுபற்றி சீன அதிகாரிகள் கூறுகையில், இந்த சேவையானது தொழில்துறை உற்பத்தி, இணையத்தின் வழி இயங்கும் வாகனங்கள், சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளை மேம்படுத்த பெரிதும் உதவும் என்றனர்.
மேலும் அமைச்சர் மியா வெய் கூறுகையில், 5ஜி சேவையானது புதிய வாய்ப்புகளை உருவாக்கி சீனாவின் மின்னணு பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும், என கூறினார்.
கருத்து தெரிவிக்க