ஜப்பானில் வரும் 8ஆம் திகதி ஜி20 நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது ஜப்பானின் பியூகோக நகரில் வரும் 8ஆம் திகதி ஆரம்பித்து இரண்டு நாட்களுக்கு ஜி20 மாநாடு நடைபெற உள்ளது.
ஜி20 அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, பிரேசில், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் அந்நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.
இம்மாநாட்டில் சர்வதேச பொருளாதாரத்தில் உருவாகியுள்ள சவால்கள், உட்கட்டமைப்புகளில் முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் சர்வதேச வரிவிதிப்பு குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க