விளையாட்டு செய்திகள்

பாகிஸ்தானை பாராட்டிய சானியா மிர்சாவை வசைபாடிய இந்திய ரசிகர்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் அரங்கில் படு தோல்வியில் இருந்து மீண்டு இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணியை பாராட்டிய சானியா மிர்சாவை இந்திய ரசிகர்கள் வசைபாடிவருகின்றனர்.

இங்கிலாந்து பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி கடும் போராட்டத்தின் மத்தியில் வெற்றிபெற்றது.

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தானின் எழுச்சியை டுவிட்டரில் பாராட்டினார்.

இதனை இந்திய ரசிகர்கள் சிலர் பாகிஸ்தான் எவ்வளவு பிரமாதமாக விளையாடினலும் சரி, உலகக்கோப்பை அரங்கில், 6-0 தான். இனியும் வெல்ல முடியாது, என சானியா மிர்சாவை வசை பாடி வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க