வெளிநாட்டு செய்திகள்

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநில தேர்தல் எப்போது?

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் குறித்து கண்காணித்து வருவதாகவும், அமர்நாத் யாத்திரைக்கு பின்னர் மாநில சட்டசபைக்கு தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க -மக்கள் ஜனநாயக முன்னணி இடையே பிளவு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு ஜூனில் சட்டசபை முடக்கப்பட்டது. புதிய ஆட்சி அமைக்க கட்சிகள் முன்வராததால் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து சட்டசபை தேர்தல் எப்போது நடக்கும் என எதிபார்ப்பு நிலவியது. இந்நிலையில் டிசம்பர் மாதம் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க