பிரித்தானியாவின் தலைநகரான இலண்டனில் வெம்பிளே என்னும் பகுதியில் உள்ள பிறைன் கண்றி பூங்காவில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் மர்மமான முறையில் இறந்து கிடந்த இரண்டு பெண்களின் உடல்கள் பொலிசாரால் மீட்கப்பட்டன.
அதன் பின்னர் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த இருவரும் சகோதரிகள் எனவும், அவர்களில் ஒருவரின் பெயர் நிக்கோல் சிமல்மென் (27) , மற்றையவர் பிபா ஹென்றி (46) என்பதும் தெரியவந்துள்ளது.
இருவரும் வெவ்வேறு நகரங்களில் வசித்து வந்த நிலையில் பிபா ஹென்றியின் பிறந்த நாளை கொண்டாட என, 5 ஆம் திகதி இரவு 7 மணிக்கு நண்பர்கள் 10 பேர் குறிப்பிட்ட பூங்காவில் கூடியுள்ளனர்.
கொண்டாட்டம் முடிந்து ஒவ்வொருவராக வெளியேறிச் செல்ல சகோதரிகள் இருவரும் கடைசிவரை பூங்காவில் இருந்துள்ளனர். அன்றிரவு அவர்கள் வீட்டிற்கு திரும்பாததால் அடுத்த நாள் காலை இருவரும் காணாமல் போய் விட்டதாக பொலிசாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் சகோதரிகள் இருவரும் இனந்தெரியாத நபர் ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க