வடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் இன்றும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட வேலைத் திட்டம்

முல்லைத்தீவில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட வேலைத் திட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் இன்றும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்று காலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம், மாங்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் கழிவகற்றல் மற்றும் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது. கிராம மக்கள் இணைந்து இந்த செயல் திட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க உங்கள் நகரத்திற்கு, என்கின்ற செயல் திட்டத்தின் மூலமாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக வளாகத்தில் மக்களுடைய குறைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்கக் கூடிய வகையில் ஜனாதிபதி செயலகத்தின் விசேட பகுதியினர் வருகை தந்து மக்களுடைய குறைகளை கேட்டறியும் செயல்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனமானது விசேடமாக 50 வீதமான விலை கழிவோடு ரவுட்டர் வழங்குகின்ற நிகழ்வும் பிரதேச செயலக வளாகத்தில் இன்று இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க