கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவில் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த தோட்டத்தில் குப்பைகளை அகற்ற முறையான குப்பைத்தொட்டி இல்லாமையால் குப்பைகளை பொது இடங்களில் வீசி செல்கின்றனர்.இதனால் பல இடங்களில் குப்பை சிதறி காணப்படுவதோடு குப்பைகளில் நீர் நிறைந்து டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குப்பைகளை அகற்ற முறையான இடத்தையும் குப்பைத்தொட்டியையும் தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் கேட்டப்பொழுதும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இனியேனும் தோட்ட நிர்வாகமும் கொத்மலை பிரதேச சபையும் தலையிட்டு இப்பிரச்சனைக்கான தீர்வை அளிக்க வேண்டுமென ஹெரோ வாழ் பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
கருத்து தெரிவிக்க