மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவை நியமிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதிக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த யோசனைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கட்சி வட்டார செய்திகள் குறிப்பிடுகின்றன.
மேல் மாகாண ஆளுநர்களாக தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரே இதுவரை இருந்து வந்துள்ளதாகவும் அந்த வழக்கத்தை மாற்ற வேண்டாம் வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க