மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் இன்றைய தினம் சனிக்கிழமை ஏல விற்பனை இடம் பெற்ற போது சுவாரசியமான சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மன்னார் நீதிமன்ற வளாகத்தில்இன்று காலை மன்னார் நீதிமன்றத்தின் புதிய நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் குறித்த ஏல விற்பனை மன்னார் நீதிமன்ற பதிவாளர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது மண் அல்லும் சவல்கள் 256, கோடாரிகள் 21, மண்வெட்டிகள் 21, படகுகள் 04, வெளியிணைப்பு இயந்திரங்கள் 04, துவிச்சக்கர வண்டிகள் 47, மற்றும் கையடக்க தொலைபேசிகள், மடிக்கனணி உள்ளடங்களான சில இதரப் பொருட்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
குறித்த ஏல விற்பனையின் போது ‘பெண்களுக்கான கைப் பை’ ஒன்றும் ஏலத்தில் விடப்பட்டது.
குறித்த கைப்பையின் ஆரம்ப விலையாக 50 ரூபாவினை அறிவித்தனர்.
இதன் போது நபர் ஒருவர் குறித்த கைப்பையினை 51 ரூபாவிற்கு ஏலத்தில் பெற்றுக்கொள்ள விலை குறித்தார்.
இந்த நிலையில் மன்னாரின் பிரபல தொழிலதிபர் ஒருவர் குறித்த கைப்பையினை 55 ரூபாவிற்கு ஏலத்தில் கோரிய நிலையில் வேறு எவரும் கேட்காத நிலையில் குறித்த தொழிலதிபர் குறித்த கைப்பையினை ஏலத்தொகையாக 55 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொண்டார்.
மன்னார் நகர சபை உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான செல்வக்குமரன் டிலான் என்பவரே குறித்த கைப்பையினை 55 ரூபாவிற்கு ஏலத்தின் மூலம் பெற்றுக் கொண்டார்.
குறித்த கைப்பையினை ஏலத்தின் மூலம் பெற்றுக் கொண்டமை தொடர்பாக மன்னார் நகர சபை உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான செல்வக்குமரன் டிலானிடன் வினவிய போது,,,
மன்னார் நீதி மன்ற வளாகத்தில் இடம் பெற்ற குறித்த ஏல விற்பனையின் போது பலரும் தமக்கு தேவையான பொருட்களை ஏல விற்பனையில் பெற்றுக் கொண்டனர்.
நானும் சில பொருட்களை பெற்றுக்கொண்டேன்.
குறித்த ‘பெண்களுக்கான கைப் பை’யினை யாரும் பெற்றுக் கொள்ளவில்லை.
ஏல விற்பனை மூலம் கிடைக்கின்ற பணம் ஏதோ ஒரு வகையில் மன்னாரின் அபிவிருத்திக்காக பயன்படும் என்ற நோக்கத்தில் பயன்படுத்த முடியாத குறித்த கைப்பையினை ஏலத்தின் மூலம் நான் பெற்றுக்கொண்டேன்.என அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க