இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த ஜூன் முதல் வாரப்பகுதியில் இலங்கைக்கு குறுகியக் கால விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலைத்தீவுக்கு செல்லும் வழியிலேயே இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றப் பின்னர் மோடி மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாக இது அமையவுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இலங்கைக்கு தமது ஒத்துழைப்பை காட்டும் வகையிலேயே மோடி இந்த குறுகிய கால விஜயத்தை மேற்கொள்கிறார்.
மோடி எதிர்வரும் 7ம் 8ஆம் திகதிகளில் மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
கருத்து தெரிவிக்க