பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி; பேர்வேஷ் முஷாரப் (வயது 75). இவரது உடல்நிலை இன்று மோசமடைந்து உள்ளது.
இதனை அடுத்து அவர் துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
அவர் யாரையும் சந்திக்க கூடாது அல்லது யாருடனும் பேச கூடாது என கூறப்பட்டு உள்ளது.
முஷாரப் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து துபாயில் வசித்து வருகிறார்.
அங்கு மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அவர் பாதுகாப்பு மற்றும் உடல்நிலையை முன்னிட்டு பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை.
கருத்து தெரிவிக்க