உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ரிஷாட்!தோற்கடிப்பார்-காங்கிரஸின் முக்கியஸ்தர்கள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகரமாக எதிர்கொண்டு, கூட்டு எதிரணியின் அரசியல் சூழ்ச்சியை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முறியடிப்பார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இன்று கூட்டாக அறிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (30) மாலை இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அ.இ.ம.காவின் உறுப்பினர்கள் மேற்கண்டவாறு அறிவிப்பு விடுத்தனர்.

‘’ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள  அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றவை.

ரிஷாட்டின் அரசியலை கருவறுப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதிகளாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

அனைத்து இனங்களையும் அரவணைத்து செயற்பட்டு வரும் எமது கட்சியும், கட்சித்தலைவரும் பயங்கரவாத்த்தையோ தீவிரவாத்தையோ என்றுமே ஆதரிப்பவர்களல்ல.

52 நாட்கள் அரசாங்கத்திற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் ஆதரவளிக்க மறுத்ததன் காரணமாகவே அதற்கு பழிதீர்க்க இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துகின்றனர். “ என்றும் குறிப்பிட்டனர்.

 

கருத்து தெரிவிக்க