ஜனாதிபதியாக மைத்திரிபாலவையும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவையும் நாடு தெரிவுசெய்ய தாமும் ஒரு அங்கமாகி, உதவியமைக்கு வருந்துவதாக சமூக நீதிக்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது
மாதுலுவாவே சோபித்த தேரரின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின்போது அந்த அமைப்பின் அழைப்பாளர் சரத் விஜேயசூரிய இதனை தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால முறைகேட்டில் ஈடுபடாதவர், இனவாதம் இல்லாதவர், மரியாதைக்குரிய மனிதர் என்று கூறியே அவரை ஜனாதிபதியாக்கவேண்;டும் என்று எம்மிடம் கூறினார்.
எனினும் இன்றுஇந்த கருத்துக்கள் பொய்யானவை என்பது முழு நாட்டுக்கும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உலகம் முழுவதும் பயணம் செய்து மக்களின் பணத்தை வீணடித்தார்.
ஆனால் மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்தவுக்கு அப்பால் சென்று இந்த விடயத்தில் தாமும் அவரைப்போன்றவரே என்பதை நிரூபித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச நீதித்துறையில் தமது செல்வாக்கை பயன்படுத்தினார்.
எனினும் அதற்கு ஈடாகவே சென்று தமக்கு தேவையான நீதியரசர்களை ஜனாதிபதி மைத்திரி நியமித்துள்ளார்.
குறுகிய அரசியல் நோக்கம், சுயநலம், பொறுப்பற்ற தன்மை என்பனவே நல்லாட்சியின் தோல்விக்கான காரணம் என்றும் பேராசிரியர் விNpஜயசூரிய தெரிவித்தார்
கருத்து தெரிவிக்க