ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருமே தவறிழைத்துவிட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். தங்காலையில் இன்று (30) நடைபெற்ற நிகழ்வின் பின்னர், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரால் நேற்று முன்வைக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் – மஹிந்தவிடம் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த மஹிந்த,“ 21/4 தாக்குதல் தொடர்பில் தனக்கு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது என தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி கூறியுள்ளார். ஆனால், எங்கிருந்து அந்த எச்சரிக்கை வந்தது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அதை தேடி அறிவதற்கும் ஆர்வம் காட்டவில்லை. பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என முன்கூட்டியே தகவல் தெரிந்தும், அது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மற்றும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தேசிய பாதுகாப்பு சபைக் கூடாமை பாரதூரமான குற்றச்சாட்டாகும். எமது ஆட்சியின்போது வாரம் ஒருமுறை பாதுகாப்பு சபைக்கூட்டம் நடைபெறும். போர்முடிவடைந்த பின்னரும் இந்த நடைமுறையை நாம் கைவிடவில்லை. ஆனால், இந்த ஆட்சியின்கீழ் இரண்டு மாதங்களாக பாதுகாப்பு சபைக் கூட்டம் நடைபெறவில்லை.
|
கருத்து தெரிவிக்க