உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம்

12–வது உலக கிண்ணக் கிரிக்கெட்டின் ஆரம்ப நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்க அணிகள் இன்று போட்டியிடுகின்றன.

இங்கிலாந்தில் இன்று தொடங்கி ஜூலை 14 வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.

உலக கிண்ண கிரிக்கட்டை இங்கிலாந்து நடத்துவது இது 5–வது முறையாகும்.

இதில் இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

1992–ம் ஆண்டு உலக கிண்ணப் பாணியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் பிரவேசிக்கவுள்ளன.

கருத்து தெரிவிக்க