சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஈபிள் கோபுரத்தில் சாகசம் மேற்கொள்ளும் பயணிகள்

ஈபிள் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அதில் சாகசப் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ள ‘ஈபிள் கோபுரம்’ உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகும்.
இது உலகின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

1887-ம் ஆண்டு தொடங்கிய ஈபிள் கோபுரத்தின் கட்டுமான பணிகள் 2 ஆண்டுகள் 2 மாதங்களில் நிறைவுப்பெற்றது.

1889-ம் ஆண்டு மார்ச் மாதம் ஈபிள் கோபுரம்; திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில்,130வது நினைவை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகள், சாசக பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக, ஈபிள் கோபுரத்தின் மேல் தளத்திலிருந்து, 800 மீட்டர் தொலைவில் உள்ள 18-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இராணுவ அலுவலகம் வரை கம்பி கட்டப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க