உள்நாட்டு செய்திகள்புதியவை

கிழக்கின் அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கிழக்கில் பின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியின் விஷேட நிதி ஒதுக்கீட்டில் இருந்து 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பின்தங்கியதும் தனித்துவிடப்பட்டதுமான கிராம அபிவிருத்தித் திட்டத்திற்கென கிழக்கு மாகாணசபையினூடாக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள கொத்தியாபுலை கிராமத்தில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி வேலைத் திட்டத்தின்கீழ் கிராம அபிவிருத்தி திட்டங்களை தெரிவு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தகவல் தந்த அவர்,மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் செங்கலடி, கிரான், வவுணதீவு, வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, வெல்லாவெளி, ஏறாவூர் நகர் மற்றும் ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கிராம அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், வவுணதீவு பிரதேசத்தில் கொத்தியாபுலை, ஆயித்தியமலை கிராமங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க