புதியவைமுக்கிய செய்திகள்

பாதுகாப்புத் தரப்பு சிறப்பாக செயற்பட்டது பாதுகாப்பமைச்சு உறுதி!

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பின்னரும் பாதுகாப்புத் தரப்பு சிறப்பாக செயற்பட்டது என பாதுகாப்பமைச்சின் செயலாளர் சாந்த கோட்டேகொட குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் இன்று காலை ஆஜராகி அவர் சாட்சியம் அளித்தார்.

குறித்த தெரிவுக்குழு உறுப்பினர்களான அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ரவூப் ஹக்கீம், சரத் பொன்சேகா, ஆசு மாரசிங்க, ஜயம்பதி விக்கிரமரத்ன, நலிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் முன்னிலையில் விளக்கமளித்தார்.

இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி இல்லாத பட்சத்தில் பாதுகாப்பு சபையை பிரதமர் அதனை கூட்டினால் அதில் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்த தாக்குதல்தாரிகள் குறித்து புலனாய்வு நடவடிக்கைகள் கிடைத்திருந்தன.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா இதுபற்றி அறிந்திருந்தாரோ எனக்கு தெரியாது. ஆனால் பாதுகாப்பு தரப்பு இயன்றமட்டில் நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

ஓரிரு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்கள் என்பதற்காக முழு புலனாய்வுத்துறையும் மங்கியது என்று கருத முடியாது. நமது புலனாய்வுத்துறை சிறப்பாகவே செயற்படுகிறது

அப்துல் ராசிக் என்பவரை கைது செய்யுமாறு பலர் கேட்டாலும் அவரை கைது செய்ய போதிய சாட்சிகள் இல்லையென்றே பொலிஸ் மா அதிபர் கூறுகிறார்.போதிய சாட்சிகள் இருந்தாலே நாம் கைது செய்யலாம்.

சில இடங்களில் வன்முறைகள் நடந்தாலும் சமூக ஊடகங்களை இடைநிறுத்தி போலியான தகவல்களை நிறுத்தி நாம் இயல்பு நிலைமையை ஏற்படுத்தினோம். ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க