உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ரத்தன தேரர் ஜனாதிபதிக்கு வழங்கிய காலக்கெடுவுக்கு இன்னும் 24 மணித்தியாலங்களே உள்ளன!

அமைச்சர் ரிசாட் பதியூதீன், ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை இன்றைய தினத்திற்குள் நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காவிடின் நாளைய தினம் தேசப்பற்றுள்ளோருடன் பேச்சுவார்த்தை நடத்தி எடுக்க வேண்டிய உச்ச அளவிலான தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்தரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் மூவரையும் பதவியிலிருந்து விலக்குவதற்காக கடந்த 21ம் திகதி அனைத்து பீட மாநாயக்கர்களும் கையொப்பமிட்ட ஆவனமொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் இதுவரை அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் அவர் மேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி ஆட்சிக்கு வரும் போது நாட்டின் எதிர்காலம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்ததாகவும் எனினும் அது தற்போது ஏமாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக தெரிவிதத ரத்தன தேரர், தற்போதைய நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு அதனை முன்னேற்ற முக்கியமானதொரு தீர்மானத்தை ஜனாதிபதி எடுக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதக் கொள்கை புற்றுநோய் போல் பரவி வருவதாகவும், எதிர்வரும் பத்து, பதினைந்து வருடங்களுக்குள் இந்த நாட்டிற்கு பிறக்கவிருந்த ஐம்பதாயிரம் குழந்தைகள் இல்லாமல் போயுள்ளமை நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க