எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு குண்டுத்துளைக்காத வாகனம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை அனுமதிக் கோரப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தக்கோரிக்கையை கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது விடுத்தார்.
எனினும் அமைச்சர் மங்கல சமரவீரவின் கருத்துக்களை அடுத்து இது தொடர்பில் அடுத்த வாரம் ஆராய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இன்று பாரிய பொருளாதார சிக்கலுக்குள் இருக்கின்றபோது இந்த வாகனக் கொள்வனவு அவர்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது கோபத்தை ஏற்படுத்தும் என்று மங்கல சமரவீர குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க