உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் குறித்து ஆராயும் விசேட நாடாளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடியது

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று முதன் முறையாக கூடியது.
இந்த குழுவின் கூட்டமானது இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுமென தெரிவிக்கப்படுகிறது. ஊடகவியலாளர் குறித்தும் இந்த விசேட தெரிவுக் குழு ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் குறித்து மாத்திரம் ஆராயாமல் அமைச்சர் ரிசாட் பதியூதீன் மீது சுத்தமப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்தும் ஆராயவுள்ளது.
இந்த கூட்டத்தின்போது முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பிலான இடைகால அறிக்கையொன்றை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, ரவி கருணாநாயக்க, ரவூப் ஹக்கீம், ராஜித்த சேனாரத்ன ஆகிய அமைச்சர்கள் மற்றும் சரத் பொன்சேகா, நளின் ஜயதிஸ்ஸ, ஆஷூ மாரசிங்க மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் இந்த நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க