புதியவைவிளையாட்டு செய்திகள்

பிரேசில் கால்பந்து அணி தலைவர் பதவியில் இருந்த நெய்மார் விலக்கல்

12 அணிகள் பங்கேற்கும் 46–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜூன் 14–ந்  திகதி முதல் ஜூலை 7–ந் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் பிரேசில் கால்பந்து அணியின் தலைவராக சீனியர் பின்கள வீரர் டேனி ஆல்வ்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தலைவர் பதவியில் இருந்து நட்சத்திர வீரர் நெய்மார் நீக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ரசிகரை கன்னத்தில் அறைந்த சர்ச்சையில் சிக்கிய நெய்மாருக்கு 3 போட்டியில் விளையாட பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் தடை விதித்தமையே இதற்கான காரணம்.

கருத்து தெரிவிக்க