உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

நியூஸிலாந்தை மேற்கிந்திய தீவுகள் வென்றது

நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலக கிண்ண கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

10 அணிகள் இடையிலான 12-வது உலக கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது.

இதையொட்டி ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது.

பயிற்சி ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று மேற்கிந்திய தீவுகள் அணி, நியூஸிலாந்தை எதிர்த்தாடியது.

முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய அணி 421 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 330 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

கருத்து தெரிவிக்க