உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

பங்களாதேஸை இந்தியா வென்றது.

பங்களாதேஸ் அணிக்கு எதிரான உலக கிண்ண கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல், டோனி இருவரும் சதம் பெற்றனர்.

10 அணிகள் இடையிலான 12-வது உலக கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது.

இதையொட்டி ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது.

பயிற்சி ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று இந்திய அணி, பங்களாதேஸை கார்டிப்பில் எதிர்கொண்டது.

பயிற்சி ஆட்டம் என்பதால் இரு அணிகளிலும் தலா 14 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

முதலில் துடுப்பாடிய இந்திய அணி 359 ஓட்டங்களை பெற்றது

.
இதனையடுத்து துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 49.3 ஓவர்களில் 264 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

கருத்து தெரிவிக்க