உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தமிழ்க் கல்வி அமைச்சு அவசியம்- அமைச்சர்கள் நவீன் , ராதாகிருஸ்ணன்

மத்திய மாகாணத்துக்கு தனியான தமிழ்க் கல்வி அமைச்சு ஒன்று அவசியம்.
அந்தமுறையை மாற்றவேண்டாம் என்று விசேட பிரதேசங்களுக்கான ராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்போது இந்தக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சை அகற்றி, அதனை மத்திய மாகாண கல்வி அமைச்சின் அதாவது முதலமைச்சருக்கு கீழ் வருகின்ற கல்வி அமைச்சுடன் இணைக்க வேண்டும் என மத்திய மாகாண கணக்காய்வாளர் கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை செய்துள்ளார்.

இது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.

இது போன்ற தீர்மானங்களை கொள்கை ரீதியில் ஜனாதிபதியே மேற்கொள்ள வேண்டும் என்றும் ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க குறித்த பரிந்துரையை தாமும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் 55 வீதமான தமிழ் மக்கள் வசித்து வருகின்றார்கள்.

எனவே இவ்வாறான கொள்கை ரீதியிலான தீர்மானங்களை நாடாளுமன்றத்தின் ஊடாகவே எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க