கருத்தடை சத்திரசிகிச்சை சர்ச்சையில் சிக்கியுள்ள வைத்தியர் சேகு சிஹாப்டீன் முஹம்மட் சாஃபி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விசேட குழுவில் 6 பேர் அங்கம் வகிப்பதாக அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.
அந்த விசாரணை நடவடிக்கைள் தொடர்பில் இன்றைய தினம் குழுவொன்று குருணாகல் வைத்தியசாலைக்கு செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குருணாகலை வைத்தியசாலையின் வைத்தியர் சேகு சிஹாப்டீன் முஹம்மட் சாஃபிக்கு எதிராக இதுவரை 51 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 46 பேர் நேற்றைய தினம் முறைப்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வீர பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க