புதியவைவிளையாட்டு செய்திகள்

உலக கிண்ணத்தை வெல்ல இங்கிலாந்துக்கு வாய்ப்பு

உலக கிண்ணத்தை வெல்ல இங்கிலாந்து அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று அவுஸ்;திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் இணையம் ஒன்றுக்கு இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து மிகவும் சிறந்த ஒரு நாள் போட்டி அணியாகும்.

உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும்.

இந்தநிலையில் அவர்கள் இந்த உலக கிண்ணப் போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்பிக்கை தமக்கு இருப்பதாக மெக்ராத் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க