ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அந்நாட்டில் அணுஆயுதங்கள் இல்லாது இருப்பதையே அமரிக்கா விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
ஜப்பான் சென்றுள்ள அமரிக்க ஜனாதிபதி இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா விலகியது முதல், இருநாடுகளுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது.
இதனையடுத்து ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்ததோடு, அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க பிற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது.
இந்தநிலையில் ஈரானை காயப்படுத்தும் நோக்கம் அமரிக்காவுக்கு இல்லை. இருதரப்பு இடையே ஒருமித்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதே சிறந்தது. என்று அவர் ஜப்பானில் வைத்து தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க