பிரேசிலில் சிறைக்கைதிகளுக்கு இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலவரத்தில் 15 கைதிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
உலகிலேயே அதிக சிறைக்கைதிகளை கொண்ட 3-வது நாடாக திகழ்கிறது.
அந்த நாட்டில் 1,12,305 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தநிலையில் அமேசோனஸ் மாகாணத்தின் தலைநகர் மனாவுசில் உள்ள சிறையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கு இடையே பெரும் கலவரம் ஏற்பட்டது.
இதையடுத்து, சிறைக்காவலர்கள் அவர்கள் அனைவரையும் பத்திரமாக சிறையில் இருந்து வெளியேற்றினர்.
இதற்குள் 15பேர் வரை கொல்லப்படடனர்.
ஏற்கனவே 2017இல் இதே சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 50பேர் வரை கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க