சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையகக் கூட்டம் இன்று. தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்குமா?

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில்; இன்று காலையில் நடைபெறுகிறது.

உயர்நீதி;மன்ற உத்தரவின்கீழ் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த மேலாண்மை ஆணையம் இதுவரை 2 முறை கூடி இருக்கிறது.

இந்த ஆணையத்தின் ஒழுங்காற்று குழு கூட்டம் கடைசியாக 23-ந் திகதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதால் கர்நாடக அரசாங்கம்,தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே சமாளிக்க முடியும் என தமிழக அதிகாரிகள் வாதிட்டனர்

இதேவேளை கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர்- ரேவண்ணா அண்மையில் தமிழகம் வந்திருந்தபோது, காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட இயலாது என்றும், அதிக மழை பெய்தால் மட்டுமே திறந்து விட முடியும் என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையிலேயே இன்றைய கூட்டம் இடம்பெறுகிறது.

கருத்து தெரிவிக்க