முஹம்மட் ஷாஃபி வைத்தியரினால் மேற்கொள்ளப்பட்ட கருகலைப்பு சத்திரசிகிச்சையினால் தாய்மாருக்கு அநீதி இளைக்கப்பட்டிருந்தால் அரசு உடனடியாக அவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பாதுகாப்பு கவுன்ஸிலில் பங்குபற்றியதாகவும் அந்த பாதுகாப்பு கவுன்ஸில் தொடர்பில் கர்தினாலுக்கு எவ்வித அறிவிப்பும் செய்யப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் குருணாகல் வைத்தியசாலையினால் அநீதி இளைக்கப்பட்ட தாய்மாருக்கு அரசு நிச்சயம் நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க