உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

தீவிரவாத செயற்பாடுகளைத் தடுக்க நிரந்தர சட்டமொன்று தேவை – பாட்டலி சம்பிக்க

அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த முடியாத காரணத்தினால் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நிரந்தர சட்டத்தின் கீழ் புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க தெரிவித்துள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற சென்று திரும்பும் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
‘அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து எங்களால் நடைமுறைப்படுத்திக்கொண்டு செல்ல முடியாது. நிரந்தர சட்டத்தின் கீழ் இந்த தீவிரவாதச் செயல்கள், அடிப்படைவாத செயற்பாடுகளை மேற்கொள்வோராக இருக்கட்டும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக இருக்கட்டும் அல்லது ஏனைய பிரிவினராக இருக்கட்டும் அவர்களை ஒழிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் பிரிதொரு ஆட்சி, பிரிதொரு சமூகத்தை உருவாக்குதல், விசேடமாக மதரஸாக்கல், ஷரியா பல்கலைக்கழகங்கள், இஸ்லாமிய கலாசார உடைகளான பர்தா, அரபு மொழியிலான பெயர் பலகைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்திக் கொண்டு செல்வதை உடனடியாக நிறுத்துவதற்காக நிரந்தர சட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.’ என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க