உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாத தலைவரான ஸஹராண் என்பவரை பாதுகாத்ததாக பரவி வரும் செய்தியானது பொய்யானது என கிழக்கு முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பித்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் இந்த செய்திக் குறிப்பு வெளியாகியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த தகவல் முற்றுமுழுதுமாக உண்மைக்குப் புறம்பானது என பொறுப்புடன் கூறமுடியுமெனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஊடாக அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் குறித்து பொய்யான தகவல்களை வழங்குவதன் மூலம் தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளை திசை திருப்ப சிலர் முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் தாம் எந்தவொரு அடிப்படைவாத மதப்பிரிவினரோடும் தொடர்புகளை வைத்துக்கொள்ளவில்லையெனவும் இன, மத, பேதமற்ற சமாதானமான இலங்கையை உருவாக்க தாம் எப்போதும் முன் நிற்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க