உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரிஷாட் பதியூதீனிடம் 6 மணிநேரம் விசாரணை

இலங்கை சதொச நிறுவனத்திற்காக ஒருதொகை அரிசி கொள்வனவின் போது மேற்கொள்ளப்பட்ட நிதிமோசடி தொடர்பில் தொழில் மற்றும் வணிகத்துறை நடவடிக்கைகளுக்கான அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடம் நிதிமோசடிகள் தொடர்பிலான பொலிஸ் பிரிவு 6 மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணைகள் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

2014 மற்றும் 2015 ஆண்டுகளில் இலங்கை சதொச நிறுவனத்திற்கு 2,57,000 மெட்ரிக் தொன் அரிசி கொள்வனவு செய்கையில் நிதிமோசடி ஏற்பட்டுள்ளதாக நிதிமோசடி தொடர்பான பொலிஸ் பிரிவிற்கு தகவல் கிடைத்ததை அடுத்து அமைச்சரிடம் அறிக்கையொன்றை பெற்றுக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2015ம் ஆண்டு முதல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அறிக்கையொன்றை வழங்குவதற்காக காலை 10.00 மணி முதல் நிதிமோசடிகள் பொலிஸ் பிரிவிற்கு ஆஜராகி மாலை 4.00க்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க