சந்தேகத்திற்கிடமாக சொத்துக்கள் சேர்த்தமை மற்றும் கருத்தடை சத்திரசிகிச்சை செய்து அவ்வாறானதொரு பாரிய குற்றத்தை இளைத்த வைத்தியரை தூக்கில் போடவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பாக எவ்வித விவாதமும் தேவையில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் கைது செய்யப்படும் அனைவரும் தீவிரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவதாகவும் அவர்களில் தீவிரவாதிகள் அல்லாதவர்களும் தீவிரவாதிகளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
செல்வந்தர் ஒருவர் கைது செய்யப்படுகின்ற போதிலும் அவரை நிதிமோசடி சட்டத்தின்கீழ் விசாரணை செய்யாமல் தீவிரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுகிறார் எனவும் கூறிய அவர் ரிஷாட் பதியுதீன் தொடர்பாகவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க