கல் எறிந்து கொள்ளுதல், கழுத்து வெட்டி கொள்ளுதல் போன்ற வேறு வேறு சட்டங்கள் இங்கு செல்லுபடியாகாது என உள்விவகார, சுதேச மற்றும் உள்ளுராட்சிமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரபு எழுத்துக்கள் அடங்கிய பெயர்க் பலகைகள் அனைத்தும் அகற்றுவதற்கு அரச உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச உத்தியோகத்தர்களுடனான சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த நாட்டில் நடைமுறையில் இருப்பது ஒரே ஒரு சட்டமாகும். அரபு பாஷையோ அரபு சட்டங்களோ இங்கு கிடையாது. கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் அரபு எழுத்துக்கள் அடங்கிய பெயர்ப் பலகைகள் காணப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பிரமருடைய மற்றும் ஜனாதிபதியுடைய ஆலோசனைக்கு அமைய சுற்றுநிருபம் ஒன்றை அமுல்படுத்தி அனைத்து பிரதேச செயலாளர், மாகாண செயலாளர், மற்றும் மாவட்ட செயலாளர், உள்ளுராட்சிமன்றங்களுக்கும் அரபு எழுத்துக்கள் அடங்கிய அனைத்து பெயர்ப் பலகைகளையும் அகற்றுவதற்கு அறிவுத்தவுள்ளோம் என தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க