உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

தீவிர சோதனை.15 கிலோ வெடிப் பொருட்கள் மீட்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் சிலவற்றில் இராணுவத்தினர் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது 40 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் விளைவாக இராணுவத்தினரும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி நேற்றும் நேற்று முன்தினமும் இரு நாட்களாக இராணுவத்தினரால் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்போது நேற்றைய தினம் (26) மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 37 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பிரதி இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் செனவிரத்ன தெரிவித்தார்.

இவர்களில் 19 பேர் மாவத்தகம பிரதேசத்திலும் 8 பேர் களுத்துறை போருதொட்ட பிரதேசத்திலும் மேலும் மூவர் நீர்கொழும்பு பெரியமுல்ல பிரதேசத்திலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வண்ணாத்திவில் பிரதேசத்தில் வைத்து ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்து 15 கிலோ வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க