யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதிலும் மக்கள் எதிர்பார்த்த சமாதானமோ பாதுகாப்போ கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நிபந்தனைகளின்றி 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு கோரிக்கை விடுத்த போதிலும் அது குறித்து அவர் கவனம் செலுத்தவில்லை என சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.
முல்லைத்தீவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் மீண்டும் அவசரக்கால சட்டம் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க