நாட்டில் மிகைப்படுத்தப்பட்ட,திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவதன் மூலம் இனவாதத்தையும் மதவாதத்தையும் சில தென்னிலங்கை ஊடகங்கள் செய்துவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டக்கிளை இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சில ஊடகங்களும் ஆதாரமற்ற செய்திகளை பிரசுரித்து வருவதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டக்கிளையின் சார்பில் அஷ்-ஷெய்க் .எஸ் .சுபிகயான் குறிப்பிட்டுள்ளார்.
ஒஸ்மானியா கல்லூரி வீதியின் ஆசாத் வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த கொழும்பில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர் மற்றும் வர்த்தகரின் வீட்டில் காணப்பட்ட நிலக்கீழ் அறை மற்றும் யாழ்ப்பாணத்தில் ஐ.எஸ் பயங்கரவாதம் போன்ற செய்திகள் இதற்கு உதாரணமானவையாகும்.
யாழ்ப்பாணம். மானிப்பாய் வீதியில் அமைத்துள்ள முஹிதீன் ஜும்ஆ மஸ்ஜிதின் தலைவரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஷரபுல் அனானும் , அந்த மஸ்ஜித்தின் இமாமும் வியாபார பிரச்சனைக்காகவே கைதுசெய்யப்பட்டனர்.
எனினும் அவர்களின் கைதுகளை ஊடகங்கள் மாற்றி வெளியிட்டிருந்தன.
எனவே ஊடகங்கள் நல்லிணக்கத்துக்கு ஒத்துழைக்;கவேண்டும் என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா – யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டக்கிளை கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்து தெரிவிக்க