இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களுடன் தொடர்புடையதாக கூறப்படுவபவர் தமது நாட்டில் இல்லை என்று மியன்மார் அறிவித்துள்ளது.
மியன்மாரின் ஜனாதிபதி அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த மாதம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்றுக்கூறி மியன்மாரில் உள்ள ஒருவர் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து அப்துல் சலாம் இசாட் மொஹமட் என்பவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.
இதன்போது கைதுசெய்யப்பட்டவர், இலங்கை அரசாங்கம் சந்தேகப்பட்டவர் இல்லை என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தமக்கும் குண்டு வெடிப்புக்களுக்கும் தொடர்புகள் இல்லையென அவர் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டவரும் நேற்று கைதுசெய்யப்பட்டவரும் மியன்மாருக்கு கடந்த வருடம் ஒரே வானூர்தியிலேயே வந்துள்ளனர்.
எனினும் சந்தேகத்துக்குரியவர் அதே வானூர்தியில் இலங்கைக்கு திரும்பிச்சென்றுவிட்டதாக மியன்மாரின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க