சினிமா

அமலாபாலின் புது அவதாரம்

அமலா பால் விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். சமூகவலைதளங்களில் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிடும்  அவர்,  கட்டுக்கோப்பான உடலுக்கு யோகா பயிற்சியே காரணம் என கூறினார்.
அவ்வப்போது ஒரு சில யோகாசனங்கள் செய்வதை படமாக வெளியிட்டு வந்த அமலாபால், தற்போது தனது குருஜியுடன் யோகா செய்யும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.
சூரிய நமஸ்காரம் செய்வது போல் காட்சி கொடுத்து இருக்கும் அமலா, ’இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயரே கூப்பி நமஸ்தே சொல்கிறேன்’ என பதிவிட்டு இருக்கிறார்.

கருத்து தெரிவிக்க