இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சட்டவிரோத கசிப்புடன் கைதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

புதுக்குடியிருப்பு – ஆனந்தபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கடந்த பெப்ரவரி 26ம் திகதி புதுக்குடியிருப்பு – ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரொருவர் 20 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதற்கிணங்க குறித்த சந்தேக நபர் நேற்று (பெப்ரவரி 27) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு அவரை எதிர்வரும் மார்ச் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க